லொட்டரியில் ஜாக்பாட் வென்ற பிரித்தானிய பெண்ணுக்கு முன்னாள் கணவர் அனுப்பியுள்ள குறும்புச் செய்தி...
லொட்டரியில் 61 மில்லியன் பவுண்டுகள் வென்ற பிரித்தானிய பெண்ணுக்கு, அவரது முன்னாள் கணவர் செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.
லொட்டரியில் 61 மில்லியன் பவுண்டுகள் வென்ற தம்பதி
இங்கிலாந்திலுள்ள லங்காஷையரைச் சேர்ந்த ரிச்சர்டு (Richard, 54) டெபி (Debbie Nuttall, 54) தம்பதியர், தங்கள் 30ஆவது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக Fuerteventura என்னும் ஸ்பெயின் தீவுக்குச் சென்றுள்ளார்கள்.
Image: Reach Commissioned
அப்போது, ரிச்சர்டுக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில், தம்பதியர் வாங்கிய லொட்டரிச்சீட்டுக்கு 61 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்க, உடனடியாக நாடு திரும்பியுள்ளார்கள் இருவரும்.
முன்னாள் கணவர் அனுப்பியுள்ள குறும்புச் செய்தி...
இந்நிலையில், டெபியின் முன்னாள் கணவரான பால் (Paul Ridge, 67), தனது முன்னாள் மனைவிக்கு லொட்டரியில் பரிசு கிடைத்துள்ள செய்தி அறிந்து அவருக்கு குறும்புச் செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
’டெபி விரும்பினால், அவருக்குக் கிடைத்த பரிசுத்தொகையில் கொஞ்சத்தை எனக்கு நன்கொடையாக வழங்கலாம், அதற்காக நான் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்’ என வேடிக்கையாகக் கூறியுள்ளார் பால்.
Image: Reach Commissioned
பால் மற்றும் அவரது மனைவியான பவுலா ( Paula, 57) தம்பதியர், லொட்டரியில் பரிசு வென்றதற்காக டெபிக்கும் ரிச்சர்டுக்கும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்கள்.
1992ஆம் ஆண்டு, பாலுக்கு 35 வயது இருக்கும்போது, அவர் தன்னை விட 13 வயது குறைவான டெபியை காதலித்தார். ஆனால், ஏனோ திருமணமாகி சில வாரங்களிலேயே இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |