சீனா உடனான தொடர்பை துண்டிப்பது சரியல்ல! ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஜேர்மனி வலியுறுத்தல்
சீனாவுடன் ஐரோப்பாவுக்கு வலுவான நிலையான தொடர்பு தேவை என்று ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் மாஸ் கூறியுள்ளார்.
மார்ச் 22 ஐரோப்பிய ஒன்றியம் விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு சீனா உடனடியாக பதிலடி கொடுத்தது இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் ஒரு புதிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது என சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கை தலைவர் Josep Borrell தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சீனா, ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டாளர், போட்டியாளர் மற்றும் அதே நேரத்தில் அமைப்பு ரீதியான போட்டியாளரும் கூட என ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் மாஸ் மாஸ் விவரித்துள்ளார். \
இந்த மூன்று பரிமாணங்களில் சீனாவுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வலுவான நிலையான தொடர்புகள் தேவை.தொடர்பை துண்டிப்பது என்பது தவறான வழி என மாஸ் கூறினார்.
Xinjiang Uyghur முஸ்லிம்களுக்கு எதிராக சீனா மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய அமெரிக்கா, பிரித்தானிய, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா ஆகிய நாடுகள், கடந்த மார்ச் மாதம் பல சீன அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதித்தது.
சீன அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டதை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீன இடையே பதட்டம் ஏற்பட்டது.