லண்டனில் இருந்து இத்தாலி, ஸ்விட்சர்லாந்து நகரங்களுக்கு நேரடி ரயில் திட்டம்
லண்டனில் இருந்து இத்தாலி, ஸ்விட்சர்லாந்து நகரங்களுக்கு நேரடி ரயில் திட்டம் விரைவில் பயன்பாட்டிற்க்கு வரவுள்ளது.
லண்டன் St Pancras ரயில் நிலையம் விரிவாக்கப்பட்டு, மிலான், ஜெனீவா, சூரிச் உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களுக்கு நேரடி ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளன.
இதன் மூலம் பயணிகள் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Getlink மற்றும் London St Pancras Highspeed இணைந்து, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு புதிய பாதைகள் தொடங்க திட்டமிட்டுள்ளன.
Frankfurt, Cologne, Geneva, Zurich, Milan போன்ற நகரங்களுக்கு சேவைகள் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Eurostar தற்போது லண்டன் மற்றும் ஐரோப்பிய நகரங்களை இணைக்கும் ஒரே சேவையாக இருக்கிறது.
ஆனால் இந்த புதிய திட்டத்தால், Virgin Group உள்ளிட்ட பல நிறுவனங்கள் Eurostar-ஐ போட்டியிட திட்டமிட்டுள்ளன. Virgin நிறுவனம் 2029க்குள் தனது உயர் வேக ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
இது குறைந்த கார்பன் பயணம் மற்றும் நீண்ட தூர ரயில் பயணங்களை மேம்படுத்த அதிக உதவியாக இருக்கும்.
லண்டன் St Pancras விரிவாக்க திட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன, இதன் மூலம் புதிய ரயில் சேவைகள் விரைவில் அறிமுகமாகலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
New direct trains from London to Italy and Switzerland, London to Milan Train, London to Zurich Train, London to Geneva Train