உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம்
ஃபிபா பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்தால் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து விலகுவதாக ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன.
உலகக் கோப்பையை புறக்கணிக்கும் ஐரோப்பா?
ஃபிபா தலைவர் ஜியானி இன்பான்டினோ(Gianni Infantino) முன்மொழிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் சர்ச்சைக்குரிய திட்டத்தை ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான UEFA எதிர்த்துள்ளது.
உலகக் கோப்பை பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தை ஃபிபா தலைவர் ஜியானி இன்பான்டினோ முன் நகர்த்தி சென்றால் UEFA உறுப்பு நாடுகள் இனி ஃபிபா உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்காது என எச்சரித்துள்ளது.

ஃபிபா பங்குகளை விற்பனை செய்யும் வணிக திட்டத்திற்கும், வெளிநாடு முதலீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 55 உறுப்பு நாடுகளை கொண்ட UEFA கூட்டமைப்பு இந்த வாரம் அவசர கூட்டம் ஒன்றை கூட்டி ஃபிபா நடத்தும் தொடர்களை புறக்கணிப்பது தொடர்பான முக்கிய முடிவை எடுத்துள்ளனர்.
மேலும் உலகக் கோப்பை போட்டிகளை முதலீட்டு பொருளாக மாற்றக்கூடாது என்றும் UEFA திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
20 பில்லியன் டொலரில் புதிய துணை நிறுவனம்

ஃபிபா தலைவர் ஜியானி இன்பான்டினோ 20 பில்லிய்ன் டொலர் மதிப்பிலான துணை நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டு இருப்பதை செவ்வாய்க்கிழமை ஃபிபா உறுதிப்படுத்தியது.
மேலும் ஃபிபா பார்வர்ட் என்டர்பிரைஸ் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய முயற்சியின் கீழ் நிறுவனத்தின் 20%-க்கும் அதிகமான பங்குகளை விற்று கிட்டத்தட்ட 4.2 பில்லியன் டொலர்களை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |