விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன்
ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் ட்ரோன் ஒன்று, சக்திவாய்ந்த எதிர்கால ஆயுதமாக உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜேர்மனியில் நடைபெற்ற பெர்லின் விமானக் கண்காட்சியில், விங்க்மேன் (Wingman) ட்ரோன்கள் மைய மேடையில் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த ட்ரோன்கள் Collaborative Combat Aircraft (CCA) என அழைக்கப்படுகின்றன. இவை, மனிதர் இயக்கும் போர் விமானங்களுடன் இணைந்து பறந்து, கூடுதல் சென்சார்கள், ஜாமர்கள் மற்றும் ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை.

ஐரோப்பா மற்றும் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்கள், உக்ரைன் போரின் அனுபவத்தால் ட்ரோன்கள் மற்றும் மின்னணு போரின் முக்கியத்துவத்தை உணர்ந்து, AI அடிப்படையிலான புதிய ட்ரோன்களை உருவாக்கி வருகின்றன.
Airbus, Boeing, Helsing, General Atomics ஆகிய நிறுவனங்கள் தங்கள் புதிய வடிவமைப்புகளை ஜேர்மன் இராணுவத்திற்கும், பிற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தின.
Boeing MQ-28 Ghost Bat 2029-ல் ஜேர்மன் Luftwaffe-யில் சேவைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Airbus Ravenstorm மாடல் 2030-களில் தான் தயாராகும். General Atomics YFQ-42A தற்போது சோதனை நிலையில் உள்ளது.
ஜேர்மனி மற்றும் பிரான்ஸ், கூட்டு போர் விமான திட்டத்தை ரத்து செய்தாலும், Future Combat Air System திட்டத்தின் பகுதிகளை மீட்டெடுத்து, ட்ரோன் மற்றும் தரவு வலையமைப்பை உருவாக்க முயற்சி செய்கின்றன.
இவை இன்னும் போர்க்களத்தில் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், 2030-களில் ஐரோப்பிய பாதுகாப்பு துறையில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |