டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம்
European countries moving their gold out of North America: ஐரோப்பிய நாடுகள் தங்கள் தங்கத்தை வட அமெரிக்காவிலிருந்து வெளியேற்றுகின்றன.
சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து டன் கணக்கிலானத் தங்கத்தை வெளியேற்றியுள்ள நெதர்லாந்து வங்கி, இந்த இடமாற்றம், கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள தங்களை மேலும் தயார்படுத்தும் என்று கூறியுள்ளது.
பொருளாதார அதிர்ச்சி
அதிகரித்து வரும் புவிசார் அரசியல் அமைதியின்மையைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவிலும் கனடாவிலும் வைக்கப்பட்டிருந்த சுமார் 313 டன் தங்கத்தில் இருந்து 86 டன்கள் லண்டனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக நெதர்லாந்து வங்கி தெரிவித்தது.

அதாவது, கடும் நெருக்கடி ஏற்படும் எனில் இந்தத் தொகுப்பை தங்களால் உடனடியாகப் பயன்படுத்த முடியும் எனவும் விளக்கமளித்துள்ளது. ஆனால், நெதர்லாந்து வங்கி ஏன் இதை தற்போது செய்கிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மட்டுமின்றி, ஏதேனும் ஒரு பெரிய பொருளாதார அதிர்ச்சியை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்களா என்றும் வினவுகின்றனர். ஆனால் அப்படியொரு நிலை தோன்றவில்லை என்றாலும்,
வர்த்தகம் மற்றும் இராணுவ மோதல்கள் காரணமாக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தங்கள் தங்கத்தை உள்நாட்டிலேயே பாதுகாப்பாக வைத்திருக்கவும் முற்படும் சூழலில்,
உலகம் எதிர்கொண்டுள்ள நிலையற்ற மற்றும் நிச்சயமற்ற நிலைக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை என புரிந்துகொள்ளப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் இருந்த தங்களது தங்க இருப்புகளைத் தாயகத்திற்குக் கொண்டுவந்துவிட்டதாக பிரான்ஸ் அறிவித்தது.
இதற்கிடையில், ஜேர்மனியின் Bundesbank கடந்த 2016-ல் முடிவடைந்த சில ஆண்டுகளில், வெளிநாடுகளில் வைக்கப்பட்டிருந்த 216 டன்னுக்கும் அதிகமான தங்களின் தங்க இருப்பை, நியூயார்க்கிலிருந்து 111 டன்கள் மற்றும் பாரிஸிலிருந்து 105 டன்கள் என இடமாற்றம் செய்தது.
பணவீக்கம், வட்டி விகிதங்கள் மற்றும் விரைவாக வர்த்தகம் செய்யக்கூடிய இடத்தில் தங்கத்தை வைத்திருப்பது ஆகியவையும் இந்த இடமாற்றத்திற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து அகற்றப்பட்ட தங்கம், தற்போது பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளதாக நெதர்லாண்ட்ஸ் வங்கி தெரிவித்துள்ளது.
400,000 தங்கக் கட்டிகள்
உலக அளவில் ஒரு முக்கிய வர்த்தக மையமாகத் திகழ்வதால், லண்டன் மிகச் சிறந்த தெரிவாகக் கருதப்படுகிறது. நெருக்கடியான சூழலில் தங்கத்தை விரைவாக வாங்கவோ அல்லது விற்கவோ விரும்பினால் லண்டனே அதற்கான சரியான இடமாகும்; இதனாலேயே 'பேங்க் ஆஃப் இங்கிலாந்து' (Bank of England) தங்கம் சேமித்து வைப்பதற்கான ஒரு பிரபலமான இடமாகத் திகழ்கிறது.

இவ்வங்கி உலகின் மிகப்பெரிய தங்கப் பாதுகாப்பாளர்களில் ஒன்றாகும். மத்திய லண்டனில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான இந்த நிறுவனத்தின் அடித்தளத்தில், 200 பில்லியன் பவுண்டுகளுக்கும் (GBP) அதிகமான மதிப்புள்ள சுமார் 400,000 தங்கக் கட்டிகள் பாதுகாக்கப்படுகின்றன.
கடந்த நான்கு ஆண்டுகளில், மத்திய வங்கிகள் ஆண்டுக்கு சராசரியாக 1,000 டன் தங்கத்தைச் சேகரித்துள்ளன; இது அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் இருந்த 500 டன் சராசரி அளவை விடக் கணிசமாக அதிகம்.

இந்தப்போக்கு உலகளாவிய நிதி நெருக்கடி காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது; மேலும், அடுத்த ஆண்டில் இது மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கோல்ட்மேன் (Goldman) நிறுவன ஆராய்ச்சியாளர்களின் கணிப்புப்படி, 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் தங்கத்தின் விலை ஒரு ட்ராய் அவுன்ஸிற்கு (troy ounce) 4,900 டொலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இது ஆகஸ்ட் மாதத்தில் இருந்த விலையை விட 300 டொலர் அதிகமாகும்.
விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, பல நாடுகளின் மத்திய வங்கிகளிடமிருந்து தங்கத்திற்கான தேவை அதிகரிப்பதாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |