டிஜிட்டல் சுகாதார பயண பாஸ் வழங்கும் முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ள நாடு
ஐரோப்பாவிலேயே, டிஜிட்டல் சுகாதார பயண பாஸ் வழங்கும் முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.
சர்வதேச பயணங்களை துவங்கும் முயற்சியாக இந்த நடவடிக்கையைத் துவங்கியுள்ளது பிரான்ஸ். முதலாவதாக, Corsica தீவுக்கு செல்லும் விமானங்களில் இந்த திட்டம் சோதனை முயற்சியாக துவங்கப்பட்டுள்ளது.
சீக்கிரத்தில் மற்ற நாடுகளுக்கும் இந்த பாஸ் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படும் என உள்ளூர் ஊடகங்கல் தெரிவிக்கின்றன. இந்த பாஸ் குறித்த மற்றொரு நல்ல விடயம் என்னவென்றால், அதை விழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் பயன்படுத்தலாம் என்பதுதான்.
வரும் காலத்தில் பிரான்சில் யாராவது கொரோனா பரிசோதனை செய்துகொண்டால், அவர்களுக்கு ஒன்லைன் ஆவணம் ஒன்று ஒரு குறுஞ்செய்தியாகவும் மின்னஞ்சலாகவும் அனுப்பப்படும்.
அதை சேவ் செய்தோ அல்லது பிரிண்ட் செய்தோ வைத்துக்கொண்டு
பயன்படுத்திக்கொள்ளலாம்.