ஐரோப்பாவின் முதல் யுனிவர்சல் தீம் பார்க்., பிரித்தானியாவில் உருவாக்க அரசு உறுதி
ஐரோப்பாவில் முதல் முறையாக Universal தீம் பார்க் பிரித்தானியாவில் உருவாக இருப்பதாக அரசு உறுதி அளித்துள்ளது.
பெட்ஃபோர்டுக்கு அருகே உள்ள பழைய செங்கல் தொழிற்சாலை இடத்தில் இந்த பூங்கா கட்டப்படவிருக்கிறது.
இது 2031-ல் திறக்கப்படும் முன்பே 28,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
476 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த பூங்கா, முதலாண்டில் 8.5 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் என Universal நிறுவனம் எதிர்பார்க்கிறது.
இந்நிறுவனம் இதற்கு முன்பு அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், சீனாவில் தீம் பார்க்களை வைத்திருந்தாலும், இது ஐரோப்பாவில் முதல் முறையாக புதியதாக வடிவமைக்கப்பட்ட பூங்காவாக இருக்கும்.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இது பெட்ஃபோர்டை உலக வரைபடத்தில் முக்கிய இடத்திற்கு கொண்டு செல்லும் எனக் கூறியுள்ளார். அவரது பிள்ளைகள் கூட இந்த அறிவிப்பில் ஆர்வம் காட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.
Universal நிறுவனத்தின் இந்த பாரிய முதலீடு பிரித்தானிய கலாச்சாரம் மற்றும் படைப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
ஹாரி பாட்டர், ஜேம்ஸ் பாண்ட், பேடிங்டன் பியர் போன்ற பிரிட்டிஷ் கதாப்பாத்திரங்கள் பூங்காவில் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது.
500 அறைகள் கொண்ட ஓட்டல், வணிக வளாகம் மற்றும் ரயில்வே நிலைய மேம்பாடுகள் இந்த திட்டத்தில் அடங்கும். 92% இடவசதிகள் பெற்ற உள்ளூர் மக்கள் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எனினும், பாதுகாப்பு, போக்குவரத்து, மருத்துவ வசதி போன்றவைகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |