யூரோ கிண்ணம்: இங்கிலாந்து கொடியை பறக்கவிட்டால் 2,500 பவுண்டுகள் அபராதம்
யூரோ கிண்ணம் தொடர் நடந்துவரும் நிலையில் லண்டன் சாரதிகள் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தங்கள் வாகனத்தில் இங்கிலாந்து கொடியை பறக்கவிட்டால் பெருந்தொகை அபராதம் செலுத்த நேரிடும் என்றே எச்சரிக்கப்பட்டுள்ளது.
300 பவுண்டுகள் அபராதம்
ஜேர்மனியில் யூரோ கிண்ணம் 2024 தொடர் களைக்கட்டி வருகிறது. பெரும்பாலான கால்பந்து ரசிகர்கள் தங்கள் ஆதரவை இங்கிலாந்து அணிக்கு வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது.
பிரித்தானியா முழுவதும் உள்ள ரசிகர்கள் தேசியக் கொடியை தங்கள் வீடுகளிலும் வாகனங்களிலும் பறக்க விடுவார்கள். ஆனால் செவ்வாய்க்கிழமை, ஜூன் 25ம் திகதி இங்கிலாந்து - ஸ்லோவேனியா போட்டியை முன்னிட்டு உங்கள் வாகனத்தில் தேசியக் கொடியை பறக்கவிட்டால், கண்டிப்பாக சிக்கல் தான் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது தவறாக இணைக்கப்பட்ட கொடிகள் மற்றும் அலங்காரங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதப்படலாம் என்றே கூறுகின்றனர். இதனால், சம்பவயிடத்திலேயே சாரதிகளுக்கு 300 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படலாம்.
1000 பவுண்டுகள் அபராதம்
அத்துடன் நீதிமன்றம் வரை செல்ல நேர்ந்தால் அபராதத் தொகை 2,500 பவுண்டுகள் வரையில் அதிகரிக்கலாம். வாகனத்தில் பொருத்தப்பட்ட கொடியுடன் பயணிப்பது குற்றமல்ல. ஆனால் அதனால் காயம் அல்லது சேதம் ஏற்படும் என்றால் அதுவே குற்றமாக கருதப்படும்.
வாகனத்தில் பொருத்தப்பட்ட கொடியானது A4 தாளின் அளவிலானது என்றால் சாதாரணமாகக் கருதப்படும். ஆனால் கொடியின் அளவு பெரியதாக இருந்தால் அது பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரித்துள்ளனர் மேற்கு யார்க்ஷயர் பொலிசார்.
கால்பந்து கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக நம்பர் பிளேட்டை அலங்கரிப்பதாக இருந்தால், அது விதிகளுக்கு உட்பட்டதாக இல்லை என்றால், 1000 பவுண்டுகள் அபராதம் செலுத்த நேரிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |