Eurovision... மகுடம் சூடிய சுவிட்சர்லாந்து
பெரும் கூச்சல், குழப்பம், விவாதங்களுக்கு மத்தியில் 2024 ஆம் ஆண்டுக்கான Eurovision பாடல் போட்டியில் சுவிட்சர்லாந்து வெற்றிவாகை சூடியுள்ளது.
சுவிஸ் பாடகர் Nemo
ஸ்வீடன் நாட்டின் Malmö நகரில் நடந்த Eurovision பாடல் போட்டியில் சுவிஸ் பாடகர் Nemo வென்றுள்ளார். நேரலை தொடங்கப்படுவதற்கு முன்னர் நீதிபதிகள் வெளியேற்றப்பட்டனர். புள்ளிகளை அறிவிப்பதில் குழப்பம் மற்றும் மறுப்பும் தெரிவிக்கப்பட்டது.
மட்டுமின்றி கலைஞர்கள் தங்களுக்கான அணிவகுப்பையும் தவறவிட்டனர். நிகழ்ச்சி தொடங்கும் முன்னர் நெதர்லாந்தின் சார்பாக பங்கேற்ற பாடகர் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டது.
மிரட்டுவதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையிலேயே நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரங்கத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இஸ்ரேலுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
மில்லியன் கணக்கான மக்கள்
இஸ்ரேல் பாடகரை வெளியேற்ற வேண்டும் என்றும் அழுத்தமளித்தனர். இறுதிப் போட்டியில் மொத்தம் 25 நாடுகள் கலந்துகொண்டன. பெரும் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில், 2024 ஆம் ஆண்டுக்கான வெற்றியாளர் சுவிட்சர்லாந்து என அறிவிக்கப்பட்டது.
பாடகர் Nemo-ன் வெற்றி மொத்த அரங்கமும் அதிர கொண்டாடப்பட்டது. இதனிடையே, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மில்லியன் கணக்கான மக்கள் Eurovision நிகழ்ச்சிகளை புறக்கணித்தனர். Greta Thunberg உட்பட பல ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |