லண்டன் விமான நிலையத்திலிருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்: தீ எச்சரிக்கையால் பரபரப்பு
லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் திடீரென தீ எச்சரிக்கை அலாரம் ஒலித்ததைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
சற்று முன் லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் திடீரென தீ எச்சரிக்கை அலாரம் ஒலித்ததைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தீயணைப்பு வாகனங்கள் வந்து சேர்ந்துள்ளதாக பயணி ஒருவர் ட்விட்டரில் செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
விமான நிலைய அலுவலர்களும் பயத்தில் உறைந்துபோனதால், எப்படி மக்கள் வெளியேறுவது என்று வழிகாட்டவும் யாருல் இல்லை என்றும், அனைவரும் வெளியேறுவதற்கு போதுமான வசால்கள் இல்லாததால் பெரும் குழப்பம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்றொருவரோ, இந்த தாமதத்தால் தங்கள் விமானத்தை மிஸ் பண்ண வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனாலும், உண்மையில் என்ன நடந்தது, எதனால் தீ எச்சரிக்கை அலாரம் ஒலித்தது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |