ஈபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்... பிரான்சில் பெரும் பரபரப்பு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள ஈபிள் கோபுரம் முதலான பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு உருவானது.
பல கட்டிடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நேற்று, அதாவது, வெள்ளிக்கிழமை, மாலை, பாரீஸிலுள்ள பல்வேறு கட்டிடங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் என கூறும் பல மின்னஞ்சல்கள் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் உருவானது.

அதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு மோப்ப நாய்களுடன் விரைந்த பொலிசார், Montparnasse கோபுரம், Sciences Po பல்கலை முதலான கட்டிடங்களில் இருந்தவர்களை உடனடியாக வெளியேற்றியுள்ளார்கள்.
🚨 BREAKING: Montparnasse Tower in Paris evacuated following a potential bomb threat.
— Summitsoldier (@Summitsoldier) February 20, 2026
Police have cordoned off the area as security teams sweep the skyscraper. Local authorities are urging people to avoid the 15th Arrondissement. 🇫🇷🗼
#Paris #Montparnasse #BreakingNews
என்றாலும், ஈபிள் கோபுரத்திலிருந்தவர்கள் வெளியேற்றப்படவில்லை, ஈபிள் கோபுரம் எந்த தடையும் இன்றி இயங்கும் என்றும் அதிகாரிகள் கூறிவிட்டார்கள்.
இதற்கிடையில், மோப்ப நாய்களுடன் பொலிசார் மேற்கொண்ட சோதனைகளில் எந்த கட்டிடத்திலும் எந்த வெடிபொருளும் இல்லை என தெரியவந்துள்ளது.
பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் உருவாக்கிய இந்த விடயம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |