கனடாவில் பள்ளியில் சக மாணவிமீது தீவைத்த சிறுமி: கவலைக்கிடம்
மேற்கத்திய நாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறார்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
சமீபத்தில் பிரித்தானியாவில் நிகழ்ந்த புலம்பெயர்தல் எதிர்ப்பு வன்முறையில் பங்கேற்றவர்களில் பலர் சிறுவர்கள் என்பது நினைவிருக்கலாம்.
கனடாவில் குற்றச்செயல்களில் சிறுமிகள்
கனடாவில், 2022ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், பூங்கா ஒன்றில் படுத்திருந்த, வீடற்றவரான கென்னத் லீ (59) என்னும் நபரை சூழ்ந்துகொண்டு 13 முதல் 16 வயதுடைய எட்டு பெண்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்துவிட்டார்.
நேற்று முன் தினம், வான்கூவர் தீவிலுள்ள Courtenay நகரில், 16 வயது சிறுமி ஒருத்தி வழியே செல்பவர்களை தாக்கியதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளார்கள்.
15 வயது சிறுமி மீது தீவைத்த 14 வயது சிறுமி
இந்நிலையில், நேற்று, Saskatoonஇல் அமைந்துள்ள Evan Hardy Collegiateஇல் படிக்கும் 14 வயது சிறுமி ஒருத்து, தன் சக மாணவியான 15 வயது சிறுமி ஒருத்தி மீது தீவைத்துள்ளாள்.
ஆசிரியைகள் தீயை அணைக்க முயன்றுள்ளார்கள். என்றாலும் அந்த மாணவி படுகாயமடைந்துள்ளாள் என்றும், அவளது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அந்த மாணவியை காப்பாற்றும் முயற்சியில் ஆசிரியை ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால், அவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தீவைத்த அந்த சிறுமி கைது செய்யப்பட்டுள்ளாள், பொலிசார் அவளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |