ரூ.6,000 நிவாரணத்தை வைத்து மிக்சி, கிரைண்டர் கூட வாங்க முடியாது: பிரேமலதா விமர்சனம்
தமிழக அரசு கொடுக்கும் ரூ.6,000 நிவாரண தொகையை வைத்து மிக்சி, கிரைண்டர் கூட வாங்க முடியாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விமர்சித்துள்ளார்.
எண்ணெய் கழிவுகள்
சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் படலங்கள் படர்ந்திருப்பதை பிரேமலதா ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, "நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விஜயகாந்த் கொண்டு வந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
எண்ணூர் முதல் பழவேற்காடு வரை எண்ணெய் படலங்கள் படர்ந்து லட்சக்கணக்கான உயிரினங்கள் இறந்துள்ளன. இதற்கு முறையாக திட்டமிடாதது தான் காரணம். இந்திய அரசும், தமிழக அரசும் இணைந்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும்" என்றார்.
ரூ.6,000 நிவாரணம்
மேலும் பேசிய அவர், "மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு கொடுக்கும் ரூ.6,000 நிவாரண தொகையை வைத்து மிக்சி, கிரைண்டர் கூட வாங்க முடியாது.
இந்த நிவாரணம் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் சேருமா என்பதில் கூட கேள்விக்குறி தான்" என்று விமர்சித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |