மரபை மீறி மன்னர் அரண்மனையில் நடந்த ஒரு நிகழ்வு: பிரித்தானியாவில் உருவாகியுள்ள கடும் சர்ச்சை
வடக்கு அயர்லாந்து தொடர்பிலான புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் குறித்து பிரித்தானிய பிரதமருடன் விவாதிக்க வந்த ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவரை, பிரித்தானிய மன்னர் சந்தித்த விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
மரபு மீறல்?
அதாவது, ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவரான உர்சுலா வான் டெர் லேயன், அரசியல் காரணங்களுக்காக பிரித்தானியா வந்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, அவர் மன்னரை அவரது விண்ட்சர் மாளிகையில் சந்திக்கும் புகைப்படங்கள் வெளியாகின. மன்னர் அவருக்கு தேநீர் விருந்து அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பிரித்தானிய மன்னர் நடுநிலையானவர், அவர் அரசியல் விடயங்களில் தலையிடக்கூடாது.
இதற்கிடையில், அரசின் ஆலோசனையின் பேரில் மன்னர் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவரை சந்தித்ததாக அரண்மனை வட்டாரம் தெரிவித்திருந்தது.
ஆக, மன்னரை அரசியலுக்குள் இழுக்கக்கூடாது என்னும் மரபை மீறி, ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவரை சந்திக்கவைத்துள்ளது பிரித்தானிய அரசு.
I’m glad to be in the UK today to meet with Prime Minister @RishiSunak.
— Ursula von der Leyen (@vonderleyen) February 27, 2023
I’m looking forward to turning a page and opening a new chapter with our partner and friend. pic.twitter.com/GuyMzy2wbj
எழுந்துள்ள சர்ச்சை
ஆகவே, அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கன்சர்வேட்டிவ் மற்றும் வடக்கு அயர்லாந்தின் DUP கட்சி அரசியல்வாதிகள், மன்னரை அரசியலுக்குள் இழுத்ததை கடுமையாக கண்டித்துள்ளார்கள்.
ஆனால், பிரதமரின் செய்தித்தொடர்பாளரோ, ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர், மன்னரை சந்திக்க விருப்பம் தெரிவித்ததாகவும், அப்படி பிரித்தானியாவுக்கு வரும் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்பது வழக்கத்துக்கு மாறான விடயமும் அல்ல என்றும் விளக்கமளித்துள்ளார்.