2024 ஜூன் மாதத்தில் ஜேர்மனியில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்
ஜேர்மனியைப் பொருத்தவரை, ஜூன் மாதம் என்பது முக்கிய மாற்றங்கள் நிகழும் மாதமாகும். அவ்வகையில், என்னென்ன மாற்றங்கள் நிகழவிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.
ஜேர்மனிக்கு வேலைக்கு வருவோருக்கு ஒரு நல்ல செய்தி
ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல், ஜேர்மனிக்கு வரும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதோர் ஜேர்மனியில் பணி புரிவதை எளிதாக்குவதற்காக, ஜேர்மனி 'opportunity card' visa என்னும் திட்டத்தை துவங்குகிறது.
வாக்களிக்கும் உரிமை
ஜேர்மனியில் ஐரோப்பிய தேர்தல்கள் ஜூன் மாதம் 9ஆம் திகதி நடைபெற உள்ளன. 720க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன், புதிய ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் ஒன்று தேர்வு செய்யப்பட உள்ளது. ஜேர்மனியைப் பொருத்தவரை, 16 வயது மற்றும் அதற்கு அதிக வயதுடயோர் வாக்களிக்கலாம்.
புதிய ஜேர்மன் குடியுரிமைச் சட்டம் அமுலுக்கு வருகிறது
ஏராளமானோர் நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் புதிய ஜேர்மன் குடியுரிமைச் சட்டம், ஜூன் மாதம் 27ஆம் திகதி அமுலுக்கு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |