காங்கிரசில் இருந்து நான் விலகியபோதும் அன்புடன் பழகியவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்: குஷ்பு பேட்டி
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பாஜக நிர்வாகி குஷ்பு பேட்டி அளித்துள்ளார்.
குஷ்பு பேட்டி
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நல்ல தலைவர் மட்டுமல்ல, நல்ல மனிதர். எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.
உலகமே தலைகீழாக நின்றாலும் கட்சிக்காக பாடுபவர். கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர். எனக்கும், அவருக்கும் போன ஜென்மம் பந்தம் இருக்கிறது என்று அவர் என்னிடம் சொல்வார்.
நிச்சயமாக எங்கள் மனதில் இருப்பார். நல்ல நண்பரை இழந்துவிட்டோம். என்னுடைய அரசியல் பயணம் அவர் இருக்கும்போது தான் ஆரம்பித்தது.
அவர் தான் என்னை காங்கிரசிற்கு அழைத்து வந்தார். நான் காங்கிரசில் இருந்து நான் விலகியபோதும் அதே அன்பு, மரியாதையுடன் பழகினார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |