வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பிரான்ஸ் தொழிலபதிருக்கும் மனைவிக்கும் நள்ளிரவில் நேர்ந்த கதி! கொள்ளை கும்பல் வெறிச்செயல்
ஊழலில் சிக்கிய தொழிலதிபரும் முன்னாள் அடிடாஸ் உரிமையாளருமான பெர்னார்ட் டாப்பியும் அவரது மனைவியும் பாரிஸுக்கு அருகிலுள்ள தங்கள் வீட்டில் நடந்த வன்முறை கொள்ளை சம்பவத்தில் தாக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்க அமைச்சராக இருந்த 78 வயதான பெர்னார்ட் டாப்பி சர்ச்சைக்குரிய நபராக உள்ளார். அவர் பல ஆண்டுகளாக ஊழல் மற்றும் மோசடி தொடர்பான சட்டப் போராட்டங்களுக்கு மத்தயில் இருந்து வருகிறார், மேலும் சிறையில் தண்டனையும் அனுபவித்தவர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பாரிஸில் உள்ள வீட்டில் டாப்பியும் அவரது மனைவி டொமினிக் (70) தூங்கிக் கொண்டிருந்தபோது, நான்கு பேர் அடங்கிய கும்பல் பாதுகாப்புக் காவலர்களைத் தாண்டி வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
தம்பதியிரை இழுத்து வந்து மின் கம்பிகாளல் கட்டிய கொள்ளை கும்பல், வீட்டில் தங்கம், பணம் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் எங்கே இருக்கிறது என கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மதிப்புமிக்க பொருட்களை கண்டுபிடிக்க முடியாததால் கோபத்தில் தம்பதிகளை கொள்ளை கும்பல் மோசமாக தாக்கியதாகவும், டாப்பி தலையில் பலமாக தாக்கப்பட்டதாக Combs-La-Ville மேயர் Geoffroy தகவல் தெரிவித்தார்.
இறுதியில் கொள்ளையர்கள் பிடியிலிருந்து தப்பிய டொமினிக், அருகிலிருந்து வீட்டுக்கு சென்ற பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பலமாக தாக்கப்பட்ட டொமினிக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படடதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாக டாப்பியின் பேரன் Rodolphe Tapie கூறினார்.
ஆனால், பெர்னார்ட் டாப்பி மருத்துவமனைக்கு செல்ல மருத்துவிட்டதாகவும், இந்த கொள்ளை சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவர் சோர்வாக இருப்பதாக Rodolphe Tapie கூறினார்.
ரோலக்ஸ் உட்பட இரண்டு கைகடிகாரங்கள், காதணிகள், வளையல்கள் மற்றும் ஒரு மோதிரத்தை திருடர்கள் திருடியச் சென்றதாக கூறப்படுகிறது.