தவெகவில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள் - யாரெல்லாம்?
4 முன்னாள் அமைச்சர்கள் உட்பட 10,000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இன்று தவெகவில் இணைகின்றனர்.
தவெகவில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள்
ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய எம்.எல்.ஏக்கள் என பலரும் தொடர்ச்சியாக இணைந்து வருகின்றனர்.

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் பிரம்மாண்ட இணைப்பு விழா இன்று நடைபெற உள்ளது.
காலை முதலே ஏராளமான மாற்றுக்கட்சியினர் விழா நடக்கும் அரங்கில் குவிந்து வருகின்றனர்.
இன்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜய பாஸ்கர், எம்.ஆர்.விஜய பாஸ்கர், எஸ்.எம்.ஆனந்தன், எஸ்.வளர்மதி உள்ளிட்டோர் இணைகின்றனர்.

மேலும், முன்னாள் எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், நகர செயலாளர்கள், நிர்வாகிகள் என கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இன்று தவெகவில் இணைகின்றனர்.
இந்த விழாவில், தவெக அரசின் அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பல மூத்த அமைச்சர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |