முன்னாள் அர்செனல் நட்சத்திரம் ரொனால்டோவை விட 20 மடங்கு பெரும் பணக்காரரா? வெளியான உண்மை
முன்னாள் பிரான்ஸ் மற்றும் அர்செனல் கால்பந்து நட்சத்திரம் மாத்தியூ ஃப்ளாமினி, கிறிஸ்டியானோ ரொனால்டோவை விடவும் 20 மடங்கு பெரும் பணக்காரர் என வெளியான தகவலில் உண்மை என்ன என்பதை அவரே வெளிப்படுத்தியுள்ளார்.
10 பில்லியன் பவுண்டுகள்
கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பின்னர் மாத்தியூ ஃப்ளாமினி உயிர்வேதியியல் நிறுவனம் ஒன்றை துவங்கினார். அந்த நிறுவனத்தால் பெரும் வருவாய் ஈட்டியுள்ளதாகவும், அவரது தற்போதைய சொத்து மதிப்பு என்பது 10 பில்லியன் பவுண்டுகள் எனவும் தகவல் கசிந்தது.
2020ல் ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட தகவலில், அந்த நிறுவனத்தில் அவருக்கு சொந்தமான பங்குகளால் 10 பில்லியன் பவுண்டுகள் வரையில் அவருக்கு கிடைக்கலாம் என குறிப்பிட்டிருந்தது.
20 மடங்கு அதிகம்
அந்த தொகையானது ரொனால்டோவின் சொத்து மதிப்பில் 20 மடங்கு அதிகம் என்றே கூறப்பட்டது. அதாவது ரொனால்டோவின் சொத்து மதிப்பு 500 மில்லியன் பவுண்டுகள் என்றே கூறப்படுகிறது.
@getty
ஆனால் 39 வயதான மாத்தியூ ஃப்ளாமினி தெரிவிக்கையில், தங்கள் நிறுவனம் லாபம் ஈட்டி வருவது உண்மை தான். இருப்பினும், தமக்கு 10 பில்லியன் பவுண்டுகள் சொத்து மதிப்பு என்பது உண்மைக்கு புறம்பானது எனவும், எங்கள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போது 20 பில்லியன் பவுண்டுகள் என்பதும் உண்மை அல்ல என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |