எக்ஸ்பிரஸ் ரயில் AC பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பாஜக முன்னாள் தலைவர்
விரைவு ரயிலின் குளிர்சாதன பெட்டியில் பாஜக முன்னாள் தலைவர் ஒருவர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டிக்கெட் இல்லாமல் பயணம்
இந்திய தலைநகர் டெல்லியிலுள்ள ராஜேந்திர நகர் முனையத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மேர் சந்திப்பு வரை லியாரத் விரைவு ரயில் செல்கிறது.
இந்த ரயிலில், பீகார் மாநிலத்தின் பாக்ஸார் மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் ராணா பிரதாப் சிங் பயணம் செய்துள்ளார். இவர், தனது நண்பர்களுடன் இந்த விரைவு ரயிலில் உள்ள முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்துள்ளார்.
வைரல் வீடியோ
பின்பு, ரயிலில் டிக்கெட் பரிசோதகர் வந்து டிக்கெட்டை காண்பிக்குமாறு பாஜக முன்னாள் தலைவரிடம் கூறுகிறார். அதற்கு அவர் பரிசோதகரை மிரட்டும் தொனியில் பேசுகிறார்.
बक्सर BJP के पूर्व अध्यक्ष राणा प्रताप सिंह ट्रेन में बिना टिकट यात्रा कर रहे थे।
— Priya singh (@priyarajputlive) October 14, 2023
जिसके बाद से जब TTE ने उनसे टिकट मांगा तो उसको तरीका सीखाने लगे हद हो गई अब तो। pic.twitter.com/RIyKkCkWmr
மேலும், என்னை நீ திருடன் என்று சொல்கிறாயா, என்னை பார்த்தால் திருடன் போல் தெரிகிறதா என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு, நீங்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறீர்கள் என அவர் சொல்கிறார்.
இவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.