திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ், திமுகவில் இணைந்துள்ளார்.
திமுகவில் இணைந்த ஓ.பி.எஸ்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை தொடங்கி செயல்பட்டு வந்தார்.
அவர் பலமுறை அதிமுகவில் சேர முயற்சித்த போதும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை சேர்த்துக்கொள்ள தயாராக இல்லை.
சமீபத்தில் திமுகவிற்கு ஆதரவாக பேசி வந்த அவர், தற்போது தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

இன்று சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற அவர், அங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.
அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.
ஓபிஎஸ் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் ஏற்கனவே திமுகவில் இணைந்த நிலையில் தற்போது ஓபிஎஸ்-ம் திமுகவில் இணைந்தார்.
2001 - 2002, 2014 - 2016, 2016 - 2017 என 3 முறை தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராகவும், 2017 - 2021 காலகட்டத்தில் துணை முதல்மைச்சமராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |