ஏராளமானோரின் சித்திரவதை, கொலைகளுக்கு உத்தரவிட்ட மருத்துவர்: பிரான்சில் விசாரணை துவக்கம்
ருவாண்டா நாட்டில், 1994ஆம் ஆண்டு நடந்த படுகொலைகளின் போது, இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மகப்பேறு மருத்துவர் ஒருவர் மீது, இன்று முதல், பிரான்சில் விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
1994ஆம் ஆண்டு நடந்த படுகொலைகள்
1994ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி, முன்னாள் ருவாண்டா அதிபரான ஹூட்டு இனத்தைச் சேர்ந்த Juvénal Habyarimanaவும் அவரது கூட்டாளியும் மற்றொரு ஹூட்டு இனத்தவருமான புருண்டி அதிபரான Cyprien Ntaryamira என்பவரும் சென்ற விமானம் ஒன்று ஏவுகணையால் தாக்கப்பட்டதில் இருவரும் பலியானார்கள்.
அவர்கள் உயிரிழப்புக்குக் காரணம் சிறுபான்மையினரான துட்சி இனத்தவரைக் கொண்ட புரட்சி அமைப்பு ஒன்றுதான் என்று கூறி, ஹூட்டு இனத்தவர்களால் துட்சி இனத்தவர்கள் வேட்டையாடப்பட்டார்கள்.
அப்போது, துட்சி இனத்தைச் சேர்ந்தவர்களில் சுமார் 800,000 பேர் பயங்கரமாக படுகொலை செய்யப்பட்டார்கள், நாட்டில் எங்கு பார்த்தாலும் இரத்த ஆறு ஒடியது, கண்ணில் கண்ட இடமெல்லாம் சவங்களாக காணப்பட்டன.
மருத்துவர் ஒருவர் மீது புகார்
அந்த படுகொலைகளின்போது, ஏராளமானோரின் சித்திரவதை, கொலைகளுக்கு உத்தரவிட்டதாக, 1995ஆம் ஆண்டு, ருவாண்டா நாட்டவரான, Sosthene Munyemana என்னும் மகப்பேறு மருத்துவருக்கு எதிராக பிரெஞ்சு நகரமான Bordeauxஇல் புகார் அளிக்கப்பட்டது.
Yahoo News UK
தற்போது, சுமார் 30 ஆண்டுகளுக்குப்பிறகு, பாரிஸ் நீதிமன்றத்தில் Sosthene விசாரணைக்குட்படுத்தப்படுகிறார்.
தன் மீதான குற்றச்சாட்டை Sosthene மறுத்துள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் ஆயுள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |