இந்தியாவின் வெற்றி உறுதி.. முதல் நாளிலே கணித்த இங்கிலாந்து முன்னாள் வீரர்! வைரலாகும் பதிவு
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்பதை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 329 ஓட்டங்களும், அதன் பின் ஆடிய இங்கிலாந்து 134 ஓட்டங்களும் எடுத்தது.
இதையடுத்து 195 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இப்போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறி வருகிறது. குறிப்பாக முதல் இன்னிங்ஸில் தமிழக வீரர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
3DOOMED ... #1-1 #INDvENG
— Michael Vaughan (@MichaelVaughan) February 13, 2021
இந்நிலையில், இப்போட்டி துவங்கிய முதல் நாளிலே இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன் இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்பதை குறிப்பிடும் வகையில் 1-1 என்று குறிப்பிட்டு டுவிட் செய்திருந்தார்.
அதே போன்று தான் தற்போது இந்திய அணியின் ஆட்டம் இருப்பதால், மைக்கல் வாகனின் டுவிட்ரை ரசிகர்கள் இப்போது டிரண்டாக்கி வருகின்றனர்.