முன்னாள் பணயக்கைதியிடம் ராணியார் நடந்து கொண்ட விதம்: அவரே அம்பலப்படுத்திய ரகசியம்
துரதிர்ஷ்டவசமாக இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களால் Terry Waite பணயக்கைதியாக்கப்பட்டார்.
ராணியாரிடமிருந்து அவருக்கும், அவரது மனைவிக்கும் மற்றும் அவர்களது நான்கு குழந்தைகளுக்கும் எதிர்பாராத அழைப்பு
லெபனான் நாட்டில் சுமார் 5 ஆண்டுகள் பணயக்கைதியான பிரித்தானியர் ஒருவரிடம் ராணியார் இரண்டாம் எலிசபெத் நடந்து கொண்ட விதம், அவரே தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்லாமிய பயங்கரவாத குழுவால் பணயக்கைதியாக்கப்பட்ட பிரித்தானியர்களை விடுவிக்கும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொண்டிருந்தார் கேன்டர்பரி பேராயரின் தூதரான Terry Waite.
@wikipedia
1987ல் லெபனான் நாட்டில் உள்நாட்டு கலவரம் நடந்துகொண்டிருக்கும் அந்த காலகட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களால் Terry Waite பணயக்கைதியாக்கப்பட்டார்.
நவம்பர் 1991ல் விடுவிக்கப்படும் வரையில், அவரது சிறைக்காலகட்டத்தின் பெரும்பகுதி கடுமையான தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார் Terry Waite. தற்போது 83 வயதாகும் Terry Waite அதன் பின்னர் தமது வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
பிரித்தானியாவுக்கு திரும்பிய பின்னர், ராணியாரிடமிருந்து அவருக்கும், அவரது மனைவிக்கும் மற்றும் அவர்களது நான்கு குழந்தைகளுக்கும் எதிர்பாராத அழைப்பு வந்துள்ளது. அது, தமது விருந்தினராக இரண்டு வார காலம் பால்மோரல் மாளிகையில் வந்து தங்க வேண்டும் என்பதே.
CREDIT: Andrew Crowley
இதனையடுத்து ராயல் விமானப்படை விமானத்தில் Terry Waite குடும்பம் ஸ்கொட்லாந்து சென்றதுடன், அங்கிருந்து ஹெலிகொப்டரில் பால்மோரல் மாளிகைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
பால்மோரல் மாளிகையில் மறைந்த டயானா பயன்படுத்தியிருந்த இல்லத்தில் Terry Waite குடும்பம் இரண்டு வார காலம் தங்கியிருந்துள்ளது. வார இறுதில் ராணியார், இளவரசர் பிலிப் மற்றும் அரச குடும்பத்து உறுப்பினர்களுடன் இரவு உணவருந்தியதும் மறக்க முடியாத அனுபவம் என குறிப்பிட்டுள்ளார் Terry Waite.
@Skynews
பெய்ரூட்டில் இருந்து பிரித்தானியா திரும்பிய பின்னர் சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப தமக்கு ஓராண்டு காலம் தேவைப்பட்டது என குறிப்பிட்டுள்ள Terry Waite, ஆனால் பால்மோரல் மாளிகையில் தங்கியிருந்த நாட்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது என்றார்.
சாதாரண மக்கள் மீது ராணியார் வைத்திருக்கும் அன்பை அப்போது தான் தாம் முழுமையாக அறிந்து கொண்டதும் அனுபவித்ததும் என உருக்கமாக தெரிவித்துள்ளார் Terry Waite.