இந்திய வம்சாவளி பெண்ணின் மண்டையோட்டை உடைத்து கொன்ற முன்னாள் கணவர்: சொத்துத்தகராறில் நிகழ்ந்த பரிதாபம்
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினரான பெண் ஒருவரை, சொத்துத் தகராறில் அவரது முன்னாள் கணவர் அடித்துக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில், Leamington Spa என்ற இடத்தில் வாழ்ந்துவந்த Bally என்ற Balvinder Gahir (54)க்கும் அவரது முன்னாள் கணவரான Jasbinder Gahir (54)க்கும், தங்கள் வீடு ஒன்றை யார் உரிமை கோருவது என்பதில் பிரச்சினை இருந்துள்ளது.
அது தான் சம்பாதித்தது என்பதால், அதை விட்டுக்கொடுக்க விரும்பாத Jasbinder, முன்னாள் மனைவியுடன் சண்டையிட்டிருக்கிறார், அதை Ballyக்கு கொடுக்கமாட்டேன் என்று அவர் தன் பிள்ளைகளிடமும் கூறியிருக்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒரு நாள் Bally தன் வீட்டில் தாக்கப்பட்டு இரத்தவெள்ளத்தில் கிடப்பது தெரியவந்துள்ளது.
மருத்துவ உதவிக்குழுவினர் வந்து பார்க்கும்போது, Bally பலமாக தாக்கப்பட்டதில், அவரது மண்டையோடு உடைந்து கிடப்பது தெரியவந்துள்ளது. ஆகவே, அவரை மருத்துவர்களால் காப்பாற்ற இயலவில்லை.
இதற்கிடையில், சம்பவம் நடந்த அன்று Bally வீட்டுக்கு சற்று தொலைவில், அவரது முன்னாள் கணவரும், மகனான Rohan (23)ம் கார் ஒன்றை கொண்டு நிறுத்தியதும், காரிலிருந்து இறங்கி வீட்டுக்குச் சென்ற Jasbinder, சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் திரும்பி தந்தையும் மகனுமாக அங்கிருந்து செல்லும் காட்சிகளும் CCTV கமெராவில் பதிவாகியுள்ளன.
ஆகவே, பொலிசார் Jasbinderஐயும் அவரது மகனான Rohanஐயும் கைது செய்துள்ளனர். Jasbinder முன்னாள் மனைவி Ballyயைக் கொலை செய்ததாகவும், Rohan அதற்கு உதவியதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள நிலையில், வழக்கு விசாரணை தொடர்கிறது.

