வெற்றிப்பெற்றாலும் கேப்டன் ரோகித் இவ்வாறு செய்தது தவறு! சுட்டிக்காட்டிய முன்னாள் இந்திய வீரர்
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றாலும், கேப்டன் ரோகித் சர்மா செய்த தவறை இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று ஜெய்பூரில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
போட்டிக்கு பின் யூடியூப் சேனலில் பேசிய இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா செய்த அரிய தவறை சுட்டிக்காட்டினார்.
ஆகாஷ் சோப்ரா கூறியதாவது, வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் வேண்டும் என இந்திய அணி கூறியது, எனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெங்கடேஷ் ஐயருடன் இந்திய அணி விளையாடியது.
ஆனால், அவரை பந்து வீச வைக்கவில்லை. ரோகித் சர்மாவின் பங்கில் இது ஒரு அரிய தவறு என்று நான் கூறுவேன், பொதுவாக அவரது கேப்டன்சி சிறப்பாக இருந்தது, ஆனால் வெங்கடேஷ் ஐயரை பந்து வீச வைக்காதது என்னை கொஞ்சம் குழப்பத்தில் ஆழ்த்தியது.
டாஸ் வென்று முதலில் பந்து வீசியபோது, குறிப்பாக முதல் பாதியில் எதிரணி திணறி கொண்டிருக்கும் போது வெங்கடேஷ் ஐயரை பந்து வீச வைத்திருக்கலாம்.
தீபக் சாஹர் மற்றும் சிராஜுக்கு நாள் சிறப்பாக அமையாததால், வெங்கடேஷ் ஐயரை ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் வீசி வைத்திருக்கலாம் என்று சோப்ரா கூறினார்.