இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங்
once india a vice captain harpreet singh bhatia, now century against india a for uae a: முன்னர் இந்திய ஏ அணியின் துணை கேப்டனாக இருந்த ஹர்பிரீத் சிங் பாட்டியா, தற்போது ஐக்கிய அரபு அமீரக அணிக்காக விளையாடி, இந்தியாவிற்கு எதிரான போட்டியில் சதம் விளாசியுள்ளார்.
சதம் விளாசிய ஹர்பிரீத் சிங் பாட்டியா
தோகாவில் நடைபெற்று வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண 2026 தொடரின் இன்றைய போட்டியில், இந்தியா ஏ மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஏ அணிகள் மோதியது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் ஆடிய ஐக்கிய அரபு அமீரக ஏ அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 249 ஓட்டங்கள் குவித்தது.
ஐக்கிய அரபு அமீரகம் தரப்பில் அதிகபட்சமாக ஹர்பிரீத் சிங் பாட்டியா, 130 ஓட்டங்கள் குவித்தார்.
249 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய ஏ அணி, வைபவ் சூரியவன்ஷியின் சாதனை இரட்டை சதத்தால் 14.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 254 ஓட்டங்கள் குவித்து பாரிய வெற்றி பெற்றது.

இந்திய ஏ அணியின் முன்னாள் துணை கேப்டன்
இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் பிறந்த 35 வயதான ஹர்பிரீத் சிங் பாட்டியா, 2009 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின்போது இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் துணை கேப்டனாக பொறுப்பு வகித்தார்.

மேலும், 2010 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ண தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்தார்.
மேலும், உள்ளூர் போட்டிகளில் மத்திய பிரதேசம் மற்றும் சட்டிஷ்கர் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், புனே வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட அணிகளில் இடம் பிடித்த அவர், 9 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 123 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
ஏப்ரல் 2026 ல் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியுரிமை பெற்ற அவர், அந்த நாட்டின் தேசிய அணிக்காக விளையாடி வருகிறார்.