முன்னாள் ஐபிஎல் கிரிக்கெட் வீரர் வன்கொடுமை வழக்கில் கைது
கிரிக்கெட் வீரர் சிவாலிக் ஷர்மா வன்கொடுமை வழக்கில் கைது செய்யபட்டுள்ளார்.
சிவாலிக் ஷர்மா
26 வயதினை சிவாலிக் ஷர்மா(shivalik sharma), பரோடா அணிக்காக ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி, 2023 ஐபிஎல் தொடருக்காக, அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு அவரை ஏலத்தில் வாங்கியது.
ஆனால், எந்த போட்டியிலும் விளையாட வாய்ப்பளிக்காமல் 2024 மெகா ஏலத்திற்கு முன்னர் அவரை விடுவித்தது.
வன்கொடுமை வழக்கில் கைது
இந்நிலையில், பெண் ஒருவர் அளித்த புகாரில், ராஜஸ்தான் மாநில காவல்துறையினரால் சிவாலிக் ஷர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது பெண் அளித்த புகாரில், ஒரு பயணத்தின் போது, சிவாலிக் ஷர்மாவுடன் அறிமுகம் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக சிவாலிக் ஷர்மா தனது குடும்பத்துடன் ஜோத்பூர் வந்து வீட்டில் பெண் கேட்டுள்ளார்.
இதனையடுத்து, இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் 2023 ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நிச்சயதார்த்தையடுத்து, இருவரும் உடல் ரீதியாக நெருங்கி பழகியுள்ளனர். தற்போது சிவாலிக் ஷர்மாவிற்கு வேறு பெண் பார்த்து வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அந்த பெண் நீதிபதி முன்னர் வாக்குமூலம் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிவாலிக் ஷர்மாவை கைது செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |