இறுதியில் கைதான பிரபல பிரேசில் கால்பந்து நட்சத்திரம்
மன்செஸ்டர் சிட்டி அணியின் முன்னாள் வீரரும் பிரபல பிரேசில் கால்பந்து நட்சத்திரமுமான Robinho இத்தாலியில் நடந்த வன்கொடுமை சம்பவம் தொடர்பில் சொந்த நகரத்திலேயே கைதாகியுள்ளார்.
9 ஆண்டுகள் தண்டனை
பிரேசில் உச்ச நீதிமன்றம் அவருக்கான 9 ஆண்டுகள் தண்டனையை உறுதி செய்துள்ள நிலையில், Robinho கைதாகியுள்ளார். வன்கொடுமை சம்பவம் தொடர்பில் நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த விவகாரத்தில் இத்தாலி நீதிமன்றம் சர்வதேச கைதாணை பிறப்பித்திருந்தது.
ஆனால் 7 ஆண்டுகளாக சிறை தண்டனையில் இருந்து தப்பி சாவ் பாலோவில் வாழ்ந்து வந்துள்ளார் Robinho. கடந்த 2017ல் ராபின்ஹோ மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியிருந்தது.
இந்த நிலையில் சிறப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இத்தாலிய அதிகாரிகள், சிறை தண்டனையை Robinho பிரேசிலில் முன்னெடுக்கவும் அனுமதி அளித்துள்ளனர்.
இதனையடுத்து Robinho உடனடியாக சிறையில் அடைக்கப்படுவார் என்றே கூறப்பட்டது. கடந்த 2013 ஜனவரி மாதம் ஒரு விடுதியில் அல்பேனியப் பெண் ஒருவரை வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் ஆறு பேர்களில் ராபின்ஹோவும் ஒருவர்.
நாட்டை விட்டு வெளியேறினால்
சம்பவம் நடந்த போது ராபின்ஹோ AC Milan அணியில் விளையாடி வந்துள்ளார். நவம்பர் 2017ல் இத்தாலிய நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
மேல்முறையீடு நடவடிக்கைகள் முடிவடையாத வரையில் தண்டனைக் காலம் தொடங்காது என்பது இத்தாலிய நாட்டில் அமுலில் இருக்கும் விதி. இதனாலையே ராபின்ஹோ தமக்கு விதிக்கப்பட்ட 9 ஆண்டுகள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டுக்கு செல்லவில்லை.
மட்டுமின்றி, வெளிநாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குடிமகனை பிரேசில் அரசாங்கமும் எளிதில் ஒப்படைத்துவிடாது. இதனால் அவர் நாட்டை விட்டு வெளியேறினால் மட்டுமே கைது செய்யப்படுவார் என்ற நிலை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |