வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற ஜேர்மன் அரசியல்வாதியால் சர்ச்சை
ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் கட்சி, வாடகைத்தாய் முறைக்கு எதிராக பிரச்சாரம் செய்துவரும் கட்சி ஆகும்.
ஆனால், அந்தக் கட்சியைச் சார்ந்த அரசியல்வாதி ஒருவரே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற அரசியல்வாதி
ஜேர்மன் சேன்சலரான பிரெட்ரிக் மெர்ஸின் கட்சியான Christian Democratic Union (CDU), மற்றும் அதன் சகோதரி கட்சியான Christian Social Union (CSU) கட்சிகளின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருப்பவர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn).

ஸ்பான், அமெரிக்காவில், வாடகைத்தாய் ஒருவர் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும், வெளிநாடொன்றில் வாடகைத்தாய் மூலம் பிறந்த குழந்தையை ஜேர்மனிக்குக் கொண்டுவர தடையேதும் இல்லை.
விடயம் என்னவென்றால், CDU கட்சி, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான தடையை நீட்டிக்க பிப்ரவரி மாதம் வாக்களித்தது.
அப்படியிருக்கும் நிலையில், கட்சிக் கொள்கைக்கு மாறாக வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்ட ஸ்பானுக்கு, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருக்க தகுதியில்லை என அவர் சார்ந்த கட்சியினரே கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆகவே, ஸ்பான் தனது நாடாளுமன்றக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என குரல்கள் வலுக்கத் துவங்கியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |