விராட் கோலி போல் பாபர் அசாம் செயல்பட வேண்டும்:பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கருத்து
விராட் கோலி போல பாபர் அசாமும் தனது கேப்டன்ஷிப் பதவியில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் பஷித் அலி கருத்து தெரிவித்துள்ளார்.
தோல்வி முகத்தில் பாகிஸ்தான்
இந்தியாவில் நடைபெற்று வரும் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையில் விளையாடி வருகிறது.
இதுவரை 5 போட்டிகளை விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 2 வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் மோசமான நிலையில் உள்ளது.
இந்த தோல்விகளுக்கு டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாட வேண்டிய கேப்டன் பாபர் அசாம் சுமாரான பேட்டிங்களை வெளிப்படுத்துவதும், களத்தில் கேப்டனாக சிறப்பான முடிவுகளை பாபர் அசாம் எடுக்க தவறியதுமே காரணம் என்று குற்றச்சாட்டு வெளிவர தொடங்கியுள்ளது.
அத்துடன் தோல்விகளுக்கு பொறுப்பேற்று பாபர் அசாம் தனது கேப்டன்ஷிப்பில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும், ரசிகர்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
விராட் கோலி போல் முடிவு
அந்த வகையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் பஷித் அலி தெரிவித்துள்ள கருத்தில், இந்த சூழ்நிலையில் பாபர் அசாம் தன்னுடைய கேப்டன்ஷிப் அழுத்தத்தால் சிறப்பாக செயல்பட முடியாமல் தவிக்கிறார்.
எனவே விராட் கோலி போல் பாபர் அசாமும் தன்னுடைய கேப்டன்ஷிப் பொறுப்பை துரந்து சிறப்பான ஆட்டத்தை பாகிஸ்தான் அணிக்கு அளிக்க வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் பஷித் அலி கருத்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறு தான் பேசிவதால் எனக்கு பாபர் அசாம் பிடிக்காது என்றும், நான் துரோகி என்றும் மக்கள் கருதுவார்கள் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் பஷித் அலி கருத்து தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |