ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணச் செலவுகள் வெளியீடு; முதலிடத்தில் யார்?
Anura Kumara Dissanayaka
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Harini Amarasuriya
By Kirthiga
இன்றைய (27) நாடாளுமன்ற அமர்வின் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கான மொத்த செலவினங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த விவரங்கள், பல ஆண்டுகளாக ஜனாதிபதி பயணங்களுக்காக அரசுக்கு ஏற்பட்ட நிதிச் செலவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
பிரதமர் ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணச் செலவுகளின் விவரத்தை பின்வருமாறு வழங்கினார்:
- மகிந்த ராஜபக்ச (2010–2014): ரூ. 3,572 மில்லியன்
- மைத்ரிபால சிறிசேன (2015–2019): ரூ. 384 மில்லியன்
- கோத்தபய ராஜபக்ச (2020–2022): ரூ. 126 மில்லியன்
- ரணில் விக்கிரமசிங்க (2023–2024): ரூ. 533 மில்லியன்
- அனுர குமார திசாநாயக்க (செப். 2024–பிப்ரவரி 2025): ரூ. 1.8 மில்லியன்
2010 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் அதிகபட்ச செலவு 2013 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது.
அப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணங்களால் ரூ.1,144 மில்லியன் இழப்பு ஏற்பட்டது என்று பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US