இளவரசர் ஆண்ட்ரூவின் குட்டு வெளிப்பட்டது: ஆதார புகைப்படங்கள் வெளியாகின
சர்ச்சைக்குரிய மோசமான அமெரிக்கக் கோடீஸ்வரர் ஒருவருடனான தொடர்பு குறித்து தொடர்ந்து மறுத்துவந்த இளவரசர் ஆண்ட்ரூவின் குட்டு வெளிப்பட்டுள்ளது.
வெளியான ஆதார புகைப்படங்கள்
மோசமான பாலியல் குற்றவாளியும், அமெரிக்கக் கோடீஸ்வரருமான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த இளவரசர் ஆண்ட்ரூ, பருவம் எய்தாத ஒரு பெண்ணுடன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டு ராஜ குடும்பத்துக்கு பெரும் அவமானத்தைக் கொண்டுவந்தது.

இந்நிலையில், ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியான சாரா ஃபெர்குசனும் எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்ததும், எப்ஸ்டீன் சிறையிலிருந்த விடுவிக்கப்பட்டதைக் கொண்டாட, தன் இரண்டு மகள்களான பீட்ரைஸ் மற்றும் யூஜீனியை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றதும் தற்போது தெரியவர, மன்னரை பொது இடத்தில் மக்கள் மடக்கிக் கேட்கும் தர்மசங்கடமான நிலை உருவானது.

சர்ச்சையில் சிக்கிய ஆண்ட்ரூவுக்கு கடும் எதிர்ப்பு உருவானதைத் தொடர்ந்து, மன்னர் சார்லஸ் ஆண்ட்ரூவின் பட்டங்களைப் பறித்தார்.
அத்துடன், ஆண்ட்ரூவும் அவரது முன்னாள் மனைவியும் இப்போது தங்கியிருக்கும் ராயல் லாட்ஜ் என்னும் பிரம்மாண்ட மாளிகையிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருந்தாலும், தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவந்தார் ஆண்ட்ரூ. ஆனால், அவரது குட்டு வெளிப்பட்டுவிட்டது.
எப்ஸ்டீன் கோப்புகள் என குறிப்பிடப்படும் ஆவணங்கள் பல வெளியாகிவரும் நிலையில், ஆண்ட்ரூவும் அவரது மனைவியும் எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படங்கள் பல வெளியாகியுள்ளன.

அவற்றில் இளம்பெண்களுடன் ஆண்ட்ரூ இருக்கும் புகைப்படங்களும் அடங்கும்.
குறிப்பாக, சில இளம்பெண்கள் வரிசையாக அமர்ந்திருக்க, அவர்கள் மடியில் ஆண்ட்ரூ படுத்திருக்கும் ஒரு புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது.

இவ்வளவு நாட்களாக தன் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்றே ஆண்ட்ரூ கூறிவந்த நிலையில், தற்போது அவருக்கு எதிராக பலத்த ஆதாரங்கள் வெளியாகியுள்ளதால், அடுத்து மன்னர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |