சர்ச்சையில் சிக்கியதால் நாட்டைவிட்டே வெளியேறும் இளவரசர் மனைவி
மோசமான நபர் ஒருவருடன் தொடர்பிலிருந்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவின் மனைவி பிரித்தானியாவை விட்டே வெளியேறக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசர் மனைவி செய்த மோசமான செயல் ஏராளம்
சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கியவர், அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர்.
பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்ததைத் தொடர்ந்து ராஜகுடும்பம் பெரும் தலைகுனிவை சந்தித்தது. அதைத் தொடர்ந்து, ஆண்ட்ரூவின் மனைவியான சாரா ஃபெர்குசனும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தது சமீபத்தில் தெரியவந்ததால் பெரும் சர்ச்சை உருவானது.

நாட்டைவிட்டே வெளியேறும் இளவரசர் மனைவி
விடயம் என்னவென்றால், தன் தம்பியான ஆண்ட்ரூவின் பட்டங்களைப் பறித்தாலும், அவருக்கு வாழ ஒரு இடம் கொடுத்துள்ளார் மன்னர் சார்லஸ்.
[CRPXWVF
ஆனால், ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியான சாரா அவருடன் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்ந்துவந்தாலும், அவருக்கு ராஜகுடும்பத்தில் யாரும் உதவ முன்வரவில்லை என கூறப்படுகிறது.

ஆக, தனித்து விடப்பட்ட சாராவுக்கு சாராவுக்கு ஆறுதலாக இருப்பதற்காக அவரது அக்காவான ஜேன் என்பவர் பிரித்தானியா வந்துள்ளாராம்.
ஜேன் அவுஸ்திரேலியாவில் வழ்கிறார். ஆக, சாராவும் தன் அக்காவுடன் அவுஸ்திரேலியாவுக்கே செல்லக்கூடும் என ராஜகுடும்ப நிபுணரான பில் (Phil Dampier) என்பவர் கூறியுள்ளார்.
என்றாலும், ஒரு பெரிய பிரச்சினை உள்ளது. என்னதான் ஆண்ட்ரூவும் சாராவும் மோசமான நபர்கள் என்றாலும், தங்கள் பிள்ளைகள் மீது அதீத பாசம் கொண்டவர்கள்.

ஆக, ஏற்கனவே சாரா தனக்கு யாருமில்லை என கூறிவரும் நிலையில், அவர் அவுஸ்திரேலியா சென்றால், அவர் தன் பிள்ளைகளைப் பிரிந்து தவிக்கும் நிலை உருவாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |