இவங்களெல்லாம் காசுக்கு நடிப்பவர்கள் தானே... வீடியோ வெளியிட்டு மீண்டும் சிக்கிய மாட் ஹான்காக்! கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்
பிரித்தானியாவின் முன்னாள் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், தொகுதி மக்களை சந்தித்து வீடியோவை ட்விட் செய்து இணையத்தில் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.
கன்சர்வேட்டிங் கட்சி எம்.பி மாட் ஹான்காக் , West Suffolk-ன் Haverhill-ல் தனது தொகுதி மக்களை நேரில் சென்று சந்தித்த வீடியோ காட்சிகளை ட்விட்டரில் பகிர்ந்தார்.
50 நொடி வீடியோவில், மாட் ஹான்காக் தொகுதியில் உள்ள கடை உரிமையாளர்களை, மக்களை நேரில் சென்று சந்திக்கிறார்.
இதன் போது தொகுதிமக்கள் பலர், சிறப்பாக செயல்படுகிறீர்கள் என மாட் ஹான்காக்கை பாராட்ட, பதிலுக்கு அவர் நன்றி தெரிவிக்கிறார்.
இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள், மாட் ஹான்காக்கை கேலி கிண்டல் செய்துள்ளனர்.
அதாவது, இந்த வீடியோவில் தோன்றியவர்களெல்லாம் காசுக்கு நடிப்பவர்கள் போல் இருக்கிறார்கள் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, கொரோனா கட்டுப்பாடுகள் அமுலில் இருந்தபோதிலும் வீடியோவை படமாக்கும் போது ஹான்காக் மக்களுடன் நிறைய தொடர்பு கொண்டிருந்ததை மற்றவர்கள் சுட்டிக்காட்டினர்.
Were they paid actors? Can't think why any sane person would be near you.
— Anne Mc Closkey (@DrAnneDerry) September 25, 2021
கடந்த மே மாதம், பிரித்தானியா சுகாதார செயலாளராக இருந்த போது மாட் ஹான்காக் சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் வைத்து பெண் உதவியாளர் Gina Coladangelo-வை கட்டியணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
Lots of contact in the dangerous covid era :)
— Nial LAT (@nial_lat) September 25, 2021
பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த விவகாரம் பெரும் சா்ச்சையாக உருவெடுத்த நிலையில் மாட் ஹான்காக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து சமீபத்தில் Gina Coladangelo-மாட் ஹான்காக் ஜோடியாக சுவிட்சர்லாந்திற்கு சுற்றுலா சென்றிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.