12 ஆண்டுகள் உடன் வாழ்ந்தவரை மாற்றிவிட்டீர்கள்! இரண்டாவது திருமணம் செய்த டி இமான் மீது முன்னாள் மனைவி காட்டம்
இசையமைப்பாளர் டி.இமானின் முன்னாள் மனைவி அவரது இரண்டாவது திருமணத்தை விமர்சித்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்த பிரபல இசையமைப்பாளர் டி.இமான், சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்தார்.
இந்த திருமணம் குறித்து ட்வீட் செய்துள்ள மோனிகா, தனது முன்னாள் கணவர் இமானை கடுமையாக விமர்சித்துள்ளளார். அவரது ட்வீட்டில், 'டியர் டி.இமான், உங்கள் இரண்டாம் திருமணத்திற்கு வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கையில் 12 ஆண்டுகள் இருந்த ஒருவரை இவ்வளவு விரைவாக மாற்ற முடியும் என்றால், உங்களை போன்ற ஒருவருக்காக நேரத்தை வீணடித்தது என்னுடைய முட்டாள்தனம். அதற்காக வருத்தப்படுகிறேன்.
Dear @immancomposer, happy married life. #SingleMomstrong #TamilCinema #Indiaglitz #DImman #vikatan #tamilmovies #tamilnews pic.twitter.com/xATB1eJH8n
— Monicka Richard (@MonickaRichard) May 15, 2022
கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் சொந்த குழந்தைகளை நீங்கள் பார்க்கவும், கவனிக்கவும் இல்லை. தற்போது அவர்களுக்கும் மாற்று கண்டுப்பிடித்துவிட்டீர்களா? எது நடந்தாலும் என் குழந்தைகளை உங்கள் அப்பாவிடம் இருந்து நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் புது குழந்தையையும் பாதுகாப்பேன். திருமண வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தைகளின் பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதாக தவறான தகவலை கூறி, புதிய பாஸ்போர்ட்டை பெற்றதாக தன் மீது போடப்பட்டுள்ள வழக்கு குறித்து பேசிய மோனிகா, முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என்றும், வீடு மாற்றும் போது குழந்தைகளின் பாஸ்போர்ட்கள் தொலைந்துவிட்டதாக இமான் கூறியதாலேயே, தான் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்ததாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இமான் தனது செல்வாக்கை பயன்படுத்தி பொய் வழக்கு போட்டுள்ளதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.