இரவு முழுவதும் தோழியுடன் மது அருந்திய 19 வயது மாணவி: மறுநாள் அதிர்ச்சி மரணம்
தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் படித்து வந்த கல்லூரி மாணவி ஒருவர், இரவு முழுவதும் மது அருந்தியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரவு முழுவதும் மது
தஞ்சாவூரைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி அஸ்வினி. இவர் செங்கல்பட்டின் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அஸ்வினி வார விடுமுறையை கழிக்க தனது தோழி ஒருவரின் அறைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் இரவு முழுவதும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
விசாரணை
உடனே அவரது தோழி இருசக்கர வாகனத்தில் அஸ்வினியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கேளம்பாக்கம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |