திருவொற்றியூரில் சீமான் வெற்றி பெறுவாரா? யாருக்கு வெற்றி வாய்ப்பு? எக்சிட் போல் பரபரப்பு
தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக தந்தி டிவியின் பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், வரும் மே 2-ஆம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன.
இதுவரை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் எல்லாம் திமுக கூட்டணியே பெரும்பான்மை பெற்று வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. தந்தி டிவியும் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக தொகுதி வாரியாக கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக தந்தி டிவி கணிப்பு தெரிவித்துள்ளது.
#ThanthiTVExitPoll : திருவொற்றியூர் தொகுதி திமுகவிற்கு சாதகம் #MakaklYarPakkam | #ExitPollWithThanthiTV | #TNElections2021 pic.twitter.com/BWqYcXGELG
— Thanthi TV (@ThanthiTV) April 29, 2021
தமிழக சட்டசபை தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிட்டார். இங்கு அதிமுக சார்பாக கே குப்பன் போட்டியிட்டார். திமுக சார்பாக கே.பி சங்கர் போட்டியிட்டார். இந்த நிலையில் திருவொற்றியூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சங்கர் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தந்தி டிவி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி நல்ல வாக்குகளைப் பெறக்கூடும், ஆனால் தி.மு.க. தான் வெற்றிபெறும், சீமான் வெற்றிபெற வாய்ப்பு இல்லை என்று தந்தி டிவி கணிப்பு தெரிவிக்கிறது.
சிஓட்டர், ரீபப்ளிக், டுடே சாணக்யா, இந்தியா டுடே, இந்தியா அஹெட் உள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளிலும் நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது என்பது போன்ற கருத்துக்கணிப்பு முடிவுகளையே வெளியிட்டுள்ளன.