கனேடிய குடியுரிமைக்கு அவசரமாக விண்ணப்பிக்கும் வசதி: யார் விண்ணப்பிக்கலாம்?
பொதுவாக கனேடிய குடியுரிமை விண்ணப்பங்கள் பரிசீலனைக்கான காலகட்டம் 7 மாதங்கள் ஆகும்.
ஆனால், அவசரமாகவும் கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான ஒரு வழிமுறை உள்ளது. அது குறித்து இங்கு காணலாம்.
கனேடிய குடியுரிமைக்கு அவசரமாக விண்ணப்பிப்பது எப்படி?
பொதுவாக கனேடிய குடியுரிமை விண்ணப்பங்கள் பரிசீலனைக்கான காலகட்டம் 7 மாதங்கள் ஆகும்.
ஆனால், சில சந்தர்ப்பங்களில் சிலருக்கு விரைவாக குடியுரிமை பெறும் தேவை ஏற்படலாம்.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
ஒரு வேலைக்காக விண்ணப்பிப்பதற்காகவோ, அல்லது வேலையை இழப்பதைத் தவிர்ப்பதற்காகவோ அவசரமாக கனேடிய குடியுரிமை தேவைப்படுவோர் கனேடிய குடியுரிமைக்கு அவசரமாக விண்ணப்பிக்கலாம்.
குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணம் அல்லது உடல் நிலை கவலைக்கிடம் என்னும் நிலையில், உடனடியாக பயணிக்கவேண்டிய கட்டாயத்திலிருப்போர் விண்ணப்பிக்கலாம்.
என்றாலும், அவசரமாக கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பித்த விண்ணப்பத்தை அவசரமாக பரிசீலிப்பதா இல்லையா என்பதை கனடா அரசுதான் முடிவு செய்யும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |