சீனாவுடன் தொடர்பிலிருந்த கனேடிய அறிவியலாளர்களை திடீரென தேசிய ஆய்வகத்திலிருந்து வெளியேற்றிய அதிகாரிகள்: நீடிக்கும் மர்மம்
கனடாவின் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் பணி செய்த தம்பதியர், திடீரென அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Dr. Xiangguo Qiu மற்றும் அவரது கணவரான Keding Cheng ஆகிய இருவரும் கனடாவின் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் பணி செய்துவந்த நிலையில், திடீரென ஒரு நாள் அதிகாரிகள் அவர்களை ஆய்வகத்திலிருந்து வெளியேற்றினார்கள்.
அவர்கள் இருவரும் இனி பணிக்கு திரும்பமாட்டார்கள் என்று மட்டும் அவர்களது சக அறிவியலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் எதனால் வெளியேற்றப்பட்டார்கள் என்பது, குறிப்பிட்ட இரகசிய காரணங்கள் காரணமாக தெரிவிக்கப்படாது என்று அதிகாரிகள் கூறிவிட்டார்கள்.
ஆனால், கடந்த ஆண்டு எபோலா முதலான பயங்கர வைரஸ்களை Dr. Qiu சீனாவிலுள்ள வுஹான் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளார்.
அத்துடன் சீனாவுடன் அவர் தொடர்ந்து தொடர்பிலும் இருந்துள்ளார். சீனாவிலிருந்து மாணவ மாணவியரை தன் உதவிக்காக என்று கூறி அழைத்து வந்தும் இருக்கிறார்.
ஆனால், சீனாவுக்கு வைரஸ்களை அனுப்பியதற்கும், தம்பதியர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும் தொடர்பில்லை என அதிகாரிகள் கூறிவிட்டதால், அவர்கள் ஏன் ஆய்வகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்பது மர்மமாகவே நீடிக்கிறது.