ராயல் நிச்சயதார்த்த மோதிரங்களின் மதிப்பு என்ன தெரியுமா? கமிலாவை பின்னுக்கு தள்ளிய கேட் வில்லியம்!
குயின் கன்சார்ட் கமிலா, இளவரசி கேட், இளவரசி மேகன் மார்க்கல் ஆகியோரின் ராயல் நிச்சயதார்த்த மோதிரங்களின் விலைமதிப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் மனைவி, Queen Consort கமிலாவின் நிச்சயதார்த்த மோதிரத்தை விட விலையுயர்ந்த மோதிரத்தை இளவரசி கேட் அணிந்துள்ளார்.
ராயல் நிச்சயதார்த்த மோதிரங்கள் உண்மையில் என்ன விலை., இருப்பதிலேயே யாருடைய நிச்சய மோதிரம் அதிக விலைமதிப்பை கொண்டது என்பது குறித்த தகவல்கள், நகை வியாபாரிகள் தங்கள் மதிப்பீடுகளைப் பகிர்ந்து கொண்டதன்மூலம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
வேல்ஸ் இளவரசி கேட் வில்லியம், இளவரசி மேகன் மார்க்கல், இளவரசி அன்னேவின் மகள் ஜாரா டின்டால் ஆகியோரின் ராயல் நிச்சயதார்த்த மோதிரங்கள் மிகவும் அடையாளம் காணக்கூடிய சில அரச குடும்ப நகைகள் ஆகும், ஆனால் அவற்றின் விலை பரவலாக அறியப்படவில்லை.
Est 1897 எனும் பிரபலமான பிரித்தானிய நகைக்கடை, விலைக்கு ஏற்ப மிகவும் விலையுயர்ந்த அரச நிச்சயதார்த்த மோதிரங்களை வரிசைப்படுத்தியுள்ளது.
இளவரசி பீட்ரைஸ்
இளவரசர் இளவரசர் ஆண்ட்ரூவின் மகளான இளவரசி பீட்ரைஸ் அணிந்திருக்கும் நிச்சயதார்த்த மோதிரம் 3.5 காரட் ரத்தின மோதிரமாகும். இதன் விலை மதிப்பு தோராயமாக 78,000 பவுண்டுகள் ஆகும். அவரது கணவர் Edoardo Mapelli Mozzi இந்த மோதிரத்தை வடிவமைப்பாளர் Shaun Leane மூலம் 4 மாதஙக்ளாக பிரத்தியேகமாக தயாரித்து இளவரசி பீட்ரைட்ஸுக்கு அணிவித்துள்ளார்.
குயின் கன்சார்ட் கமிலா
குயின் கன்சார்ட் கமிலாவுக்கு மன்னர் மூன்றாம் சார்லசால் அழகான ஆர்ட் டெகோ மோதிரம் வழங்கப்பட்டது, மேலும் அதன் மையத்தில் ஐந்து காரட் emerald-cut வைரம், ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று baguette வடிவ வைரங்கள் உள்ளன. இது ஒரு காலத்தில் எலிசபெத் ராணி அம்மா, சார்லஸின் பாட்டிக்கு சொந்தமானது, மேலும் இதன் மதிப்பு 100,000 பவுண்டுகள் ஆகும்.
மேகன் மார்க்கல்
இளவரசி மேகன் மார்க்கலின் நிச்சதார்த்த மோதிரம் ஒரு முத்தொகுப்பு வைர மோதிரமாக. நடுவில் பெரிய வைரமும், அதன் இரு பக்கத்திலும் ஒவ்வொரு சிறிய வைர கற்களும் இருக்கும். பெரிய வைரத்தை இளவரசர் ஹரி போட்ஸ்வானாவில் இருந்து கொண்டுவந்தார், மற்ற இரண்டு சிறிய வைரக்கற்கள், ஹரியின் தாய் இளவரசி டயானாவின் தனிப்பட்ட சேகரிப்பில் இருந்து சேர்க்கப்பட்டவை ஆகும். இந்த மோதிரம் குறைந்தது 134,500 பவுண்டுகள் மதிப்புடையதாக கருதப்படுகிறது.
ஜாரா டிண்டால்
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் ஒரே மகளான இளவரசி அன்னேவின் மகள் ஜாரா டின்டால், மேகன் மார்க்கலின் மோதிரத்தை விட விலைமதிப்புடையை நிச்சயதார்த்த மோதிரத்தை அணிந்துள்ளார்.
ஜாரா டின்டாலின் கணவர் ரக்பி விளையாட்டு வீரரான Mike Tindall தனது அரச குடும்பத்து மணப்பெண்ணுக்காக ஒரு பிரத்தியேக மோதிரத்தை அணிவித்தார். இந்த மோதிரத்தின் மதிப்பு சுமார் 140,000 பவுண்டுகள் என தி டயமண்ட் ப்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி மைக் ஃப்ரைட் குறிப்பிடுகிறார்.
இளவரசி டயானா
எல்லா காலத்திலும் மிகவும் பிரபலமான அரச நிச்சயதார்த்த மோதிரங்களில் ஒன்று வேல்ஸ் இளவரசி டயானாவின் மோதிரம் ஆகும். அப்போது இளவரசராக இருந்த சார்லஸுடன் நிச்சயதார்த்தம் செய்தபோது, டயானா தனக்கென சொந்தமாக நீலமணி ரத்தின மோதிரத்தைத் தேர்ந்தெடுத்தார். இந்த அற்புதமான 12-காரட், ஓவல்-கட் ஆபரணத்தின் மதிப்பு 390,000 பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வேல்ஸ் இளவரசி கேட்
கேட் இளவரசி டயானாவின் அதே மோதிரத்தை தான் இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட்டிற்கு அணிவித்தார். எனவே, அதன் விலை 390,000 பவுண்டுகள் தான். இருப்பினும், இந்த தனித்துவமான மரபு மூலம், இந்த மோதிரம் இப்போது நிச்சயமாக மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இதன்மூலம், பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் மனைவி, Queen Consort கமிலாவின் நிச்சயதார்த்த மோதிரத்தை விட விலையுயர்ந்த மோதிரத்தை இளவரசி கேட் அணிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.