தமிழக அரசு பள்ளிகளில் புதிய Experiential Learning முறை அறிமுகம்
சென்னையில் மாணவர்களின் கற்றலை மாற்றும் வகையில் மாநில அனுபவக் கற்றல் வளமையம் தொடங்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி டிபிஐ வளாகத்தில் இதை திறந்து வைத்தார்.
இந்த மையத்தில் மாணவர்கள் புத்தகத்தை மனப்பாடம் செய்வதை விட, அறிவியல், கணிதம், மொழி, சமூக அறிவியல் போன்ற பாடங்களை மாதிரிகள் மற்றும் செய்முறை கருவிகள் மூலம் நேரடியாக கற்றுக்கொள்ளலாம்.

வண்ண மாடல்கள், கருவிகள் போன்றவற்றை பயன்படுத்தி பார்க்கவும், தொடவும், செய்து கற்றுக்கொள்ளவும் முடியும்.
இதனால் கடினமான கருத்துகளும் எளிதாக புரியும். ஆசிரியர்களுக்கும் புதிய கற்பித்தல் முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படும்.
குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இந்த அனுபவக் கற்றலை காண முடியும்.
சென்னையில் தொடங்கிய இந்த மையம் விரைவில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |