வில்லியம் மன்னரானால் மன்னராட்சியின் நிலை என்ன? நிபுணர்கள் கருத்து
பிரித்தானிய இளவரசர் வில்லியம் இன்னமும் மன்னராகவில்லை. என்றாலும், அவர் மன்னராகும்போது மன்னராட்சி எப்படி இருக்கும் என்பது குறித்து இப்போதே கணித்துவருகிறார்கள் நிபுணர்கள்.
வில்லியம் மன்னரானால்...
இளவரசர் வில்லியம் தனது எதிர்கால திட்டங்கள் குறித்து பெரிய அளவில் பகிர்ந்து கொண்டதில்லை.
ஆனால், வில்லியம் மன்னரானால், மன்னராட்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எவரையும் காணாமல்போகச் செய்துவிடுவார் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான ஹெலன் (Helena Chard).
பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கிய, வில்லியமுடைய சித்தப்பாவான இளவரசர் ஆண்ட்ரூ கூட தப்பமுடியாது என்கிறார்கள் நிபுணர்கள்.
பல இளம்பெண்களையும், சிறுமிகளையும் சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இளவரசர் ஆண்ட்ரூ தொடர்பிலிருந்த விடயம், பெரும் சர்ச்சையையும் ராஜ குடும்பத்துக்கு அவமானத்தையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |