புலம்பெயர்வோர் பயணிக்க சிறு படகுகளுக்கு பதில் பெரிய படகுகள்: பின்னணி குறித்து எச்சரிக்கும் குற்றவியல் நிபுணர்
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக சிறு படகுகள் மூலம் புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாய் வழியாக பயணிப்பது குறித்த விடயம் அனைவரும் அறிந்ததே.
சிறுபடகுகளில் எக்கச்சக்கமாக ஆட்களை ஏற்றிகொண்டு அவர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆட்கடத்தல்காரர்கள் நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு உள்ளது.
சிறு படகுகளுக்கு பதில் பெரிய படகுகள்
இந்நிலையில், சிறு படகுகளுக்கு பதில் பெரிய படகுகளைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள் கடத்தல்காரர்கள்.
Wow.
— Zia Yusuf (@ZiaYusufUK) September 28, 2025
125 illegals just arrived in a SUPER dinghy - the largest ever in a single boat
1300 so far this weekend.
The only place Labour is driving innovation is in the illegal dinghy market.
Do not complain, however, or Starmer will call you racist. pic.twitter.com/W12ET0SCmh
ஆனால், அது ஒன்றும் எல்லை பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாடுகளுக்கு பயந்தோ, புலம்பெயர்வோர் நலனுக்காகவோ அல்ல என எச்சரிக்கிறார் குற்றவியல் நிபுணரான Tuesday Reitano.
ஆம், மேலும் அதிக எண்ணிக்கையில் புலம்பெயர்வோரை படகுகளில் ஏற்றிக்கொள்வதற்காகத்தால் பெரிய படகுகள் என்று கூறும் அவர், அந்த பெரிய படகுகளிலும் கடத்தல்காரர்கள் அளவுக்கு அதிகமான புலம்பெயர்வோரைத்தான் ஏற்றுகிறார்கள் என்கிறார்.

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்?
அதுமட்டுமல்ல, இந்த படகுகளை கடத்தல்காரர்களுக்கு விற்பதன் சர்வதேச பின்னணி குறித்தும் விளக்கியுள்ளார் Reitano.
ஆம், அந்தப் படகுகளில் பல சீனாவில் தயாரிக்கப்பட்டு, துருக்கி வழியாக கொண்டுவரப்பட்டு ஜேர்மனியில் சேமித்துவைக்கப்பட்டு பின்னர் ஐரோப்பா முழுவதும் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் Reitano.
சட்டவிரோத புலம்பெயர்வோர் பயன்படுத்தும் சிறு ரப்பர் படகுகள் ஜேர்மனியில் சேமிப்பகங்களில் சேமித்துவைக்கப்பட்டுள்ளது சமீபத்தில் தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து, பிரித்தானிய அதிகாரிகள் ஜேர்மனியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அந்த படகுகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |