பறவை காய்ச்சல் எச்சரிக்கை..! பால், முட்டைகளை உட்கொள்ளலாமா?
கொரோனா வைரஸின் அச்சம் குறைந்துள்ள நிலையில், தற்போது உலகின் சில நாடுகளில் பறவைக் காய்ச்சல் பதற்றத்தை ஏற்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல்
அமெரிக்காவில் கண்டறியப்பட்ட H5N1 வைரஸ், கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
அங்குள்ள 8 மாநிலங்களில் உள்ள 29 பண்ணைகளில் வளர்க்கப்படும் பசுக்கள் மற்றும் கோழிகளில் இந்த வைரஸ் பரவி வருவதாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பீதி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கேரளாவின் எல்லையோர மாவட்டங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளன.
உலக சுகாதார நிறுவனமானது வைரஸ் பசுவின் பால், முட்டை மற்றும் கோழி இறைச்சியில் பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பதாக உறுதி செய்துள்ளது.
முட்டை மற்றும் பால்
இந்த வைரஸ் பாலில் கண்டறியப்பட்டதால் முட்டை மற்றும் பால் சாப்பிடலாமா என்று பலர் சிந்தித்து வருகின்றனர்.
வீட்டில் இவற்றை எவ்வாறு கையாள்வது என்பது மிகவும் முக்கியம் ஆகும். குறிப்பாக நன்றாக சமைத்து உண்ண வேண்டும் மற்றும் மஞ்சள் கரு கூட பச்சையாக இருக்கக் கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பாலின் பாதுகாப்பு Pasteurization-ஐ பொறுத்தது. பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ்களைக் கொல்லும், வணிக ரீதியாக கிடைக்கும் அனைத்து பாலும் இந்த செயல்முறைக்கு உட்படுகிறது. எனவே சுத்திகரிக்கப்பட்ட பால் சாப்பிடுவதற்கு பாதுக்காப்பானது.
முட்டை, பால் மூலம் பறவைக் காய்ச்சல் வருவதற்கான ஆபத்து மிகவும் குறைவு.
சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால் ஆபத்து இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |