மூன்றாம் உலகப்போர் வெடிக்குமா? நிபுணர்கள் கருத்து
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானை தாக்க, ஈரான் சுழன்று சுழன்று பல்வேறு நாடுகள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம், ரஷ்யாவும் உக்ரைனும் மோதிக்கொண்டிருக்க, வடகொரியா தென்கொரியா மீதும், சீனா தைவான் மீதும் தாக்குதல் நடத்த சரியான தருணத்துக்காக காத்திருக்கின்றன.
ஆக, மூன்றாம் உலகப்போர் வெடிக்குமா என்ற கேள்வி, சொல்லப்போனால் அச்சம் உலக நாடுகள் பலவற்றிற்கும் உருவாகியுள்ளதை மறுப்பதற்கில்லை.
மூன்றாம் உலகப்போர் வெடிக்குமா?
உலகின் பல்வேறு பகுதிகளில் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. என்றாலும், மூன்றாம் உலகப்போர் வெடிக்காது என்கிறார்கள் வரலாற்றாளர்கள், துறைசார் நிபுணர்கள்.

அதாவது, போரில் ரஷ்ய ஜனாதிபதியான புடினோ, சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங்கோ தலையிட்டால் பிரச்சினை பெரிதாகும்.
ஆனால், சீனாவைப் பொருத்தவரை, எட்டு ஆண்டுகள் உரசலுக்குப் பின் இப்போதுதான் அமெரிக்காவுடன் நட்பு பாராட்ட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த மாத இறுதியில் சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ள நேரத்தில், ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு அமெரிக்காவுடனான உறவை ஜி ஜின்பிங் கெடுத்துக்கொள்ள விரும்பமாட்டார் என்கிறார்கள் நிபுணர்கள்.
அதேபோல, ரஷ்யாவும் ஈரானுடன் கைகோர்க்க வாய்ப்பில்லை என்கிறார்கள் அவர்கள்.
அதாவது, ஈரான் தாக்குதல் காரணமாக ஹோர்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அது, தன்னிடமிருக்கும் எண்ணெயை விற்க ரஷ்யாவுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது. ஆக, ட்ரம்ப் ஈரான் எண்ணெய் வயல்களை தாக்கினால், அது ரஷ்யாவுக்கு நன்மையைத்தான் ஏற்படுத்தும்.

அதாவது, மீதமிருக்கும் எண்ணெய் உற்பத்தி செய்யும் சில நாடுகளில் ரஷ்யா ஒன்றாகிவிடும்.
ஆக மொத்தத்தில் உலகின் பெரிய நாடுகள் பல, குறிப்பாக தங்கள் வர்த்தகம் மீது கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் நிலையில், தேவையில்லாமல் ஈரான் போரில் தலையிட்டு தங்களுக்கு வரவிருக்கும் நன்மையைக் கெடுத்துக்கொள்ளாது என்கிறார்கள் நிபுணர்கள்.
ஆக, மூன்றாம் உலகப்போர் வெடிக்காது என்பது அவர்கள் கருத்து. அது அனைவருக்கும் நல்லதுதானே!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |