தங்கத்தின் அதிவேக விலை உயர்வுக்கு இதுதான் காரணமாம்
TINA எனும் காரணி தான் தங்கத்தின் விலையை உயர்த்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
சீனாவில் 2023ஆம் ஆண்டில் மக்கள் 630 டன் தங்கத்தை வாங்கினர். ஆனால் அங்கு TINA எனும் காரணி பாரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
There is no Alternative என்பதன் சுருக்கம் தான் TINA. இதற்கு மாற்றாக வேறு ஒன்றும் இல்லை என்ற கருத்து, தங்கத்தின் விலை இவ்வாறு உச்சத்தை தொடுவதற்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் உலகம் முழுவதும் பாதுகாப்பான முதலீடாக எப்போதும் இருந்து வருவது தங்கம் தான்.
சீனாவில் உள்ள சில்லறை விற்பனை கடைக்காரர்கள், முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் மத்திய வங்கிகளும் கூட அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவித்து வருவதால், Demand அதிகரித்து தங்கத்தின் விலையும் உயர்ந்து வருகிறது.
அதாவது சீனாவில் தான் முதல் முறையாக இப்படி தங்கத்தின் Demand அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. தலைநகர் பெய்ஜிங்கில் தங்க நகைகளுக்கான தேவை 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
TINA காரணமாக எதிர்காலத்தில் தங்கத்தின் தேவையும், விலையும் அதிகரிக்கும் என ஹாங்காங்கின் Precious Metals Insights Limited மேலாண் இயக்குனர் கிலாப்விஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ''அண்மை காலமாக சீனாவின் ரியல் எஸ்டேட் துறை மந்தமாகி வருகிறது. பங்குச்சந்தையும் நிலையற்று இருக்கிறது. இதனால் தங்கத்திற்கு மாற்று எதுவும் இல்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |