பிரான்சில் இந்த குளிர்காலத்தில் இந்த நோய் அதிக அளவில் பரவும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை
பிரான்சில் இந்தக் குளிர்காலத்தில் ப்ளூ காய்ச்சல் அதிக அளவில் பரவும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.
பலவீனமடைந்துள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் தடுப்பூசி பெறுவது தொடர்பில் முடிவெடுக்கத் தயக்கம் போன்ற விடயங்கள் அதற்கு காரணமாக கருதப்படுகிறது.
மக்களுடைய நோயெதிர்ப்பு சக்தி பலவீனமடைந்துள்ளது மற்றும் தடுப்பூசி பெறுவது தொடர்பில் முடிவெடுக்கத் தயக்கம் போன்ற விடயங்கள் காரணமாக, இந்த குளிர்காலத்தில் பிரான்சில் மோசமான ப்ளூ காய்ச்சல் அதிக அளவில் பரவும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.
கோவிடுக்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கைகள் ப்ளூ காய்ச்சலை அண்டவிடாமல் வைத்திருந்தன, என்று கூறும் நோயெதிர்ப்பு சக்தியியல் நிபுணரான Alain Fischer, இந்த ஆண்டு, அதே அளவு பாதுகாப்பை பராமரிப்பது கடினம் என்கிறார்.
அப்போது மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி மற்றும் கைகளை நன்றாக கழுவுதல் முதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைமுறையில் இருந்தன. தற்போது அவை நெகிழ்த்தப்பட்டுள்ளதால், ப்ளூ பரவும் பயங்கர அபாயம் ஏற்பட்டுள்ளது என்கிறார்.
ஆகவே, மக்கள், குறிப்பாக எளிதில் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்திலிருப்போர், தடுப்பூசி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அக்டோபர் மாதத் துவக்கத்தில் கோவிட் தடுப்பூசியும், அக்டோபர் மாத இறுதியில் ப்ளூ தடுப்பூசியும் பெற்றுக்கொள்வது சாத்தியமே என்று கூறும் Fischer, இரண்டுமே நமக்குத் தேவைப்படும் என்கிறார்.