இளவரசர் வில்லியமுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி: நிபுணர் கூறும் முக்கிய தகவல்
இளவரசர் வில்லியம் தன் சகோதரரான ஹரியுடன் சமாதானம் செய்துகொள்ளவில்லை என்றால், அது பிரித்தானியாவுக்கு எண்ணிப்பார்க்கமுடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.
இளவரசர் வில்லியமுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி
மன்னர் சார்லஸின் காலம் முடிந்ததும், வில்லியம் மன்னராவார். அப்போது கோடிக்கணக்கில் பின்தொடர்வோரைக் கொண்ட ஹரியால் அவருக்கு பிரச்சினை ஏற்படும் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான ஆண்ட்ரூ (Andrew Norman Wilson).
வில்லியம் தன் சகோதரரான ஹரியுடன் சமாதானம் செய்துகொள்ளவில்லை என்றால், ஹரியும் மேகனும் பழிவாங்க முயல்வார்கள். ஆகவே, அவர்களுடன் வில்லியம் சமாதானம் செய்துகொள்வதே நல்லது என்கிறார் ஆண்ட்ரூ.
இளவரசர் வில்லியமுடைய நலம் விரும்பிகள் அனைவருமே, இன்னொரு வகையில் கூறினால், மன்னராட்சியின் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என விரும்பும் அனைவருமே, வில்லியம் தன் தம்பியுடன் சமாதானம் செய்துகொள்வதற்காக ஏதாவது முயற்சி செய்யவேண்டும் என்றே எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்கிறார் அவர்.
ஹரியும் மன்னர் சார்லசும் சமாதானமாகிவிட்டால் மகிழ்ச்சிதான். அதே நேரத்தில், அடுத்து வில்லியம் மன்னராவார். அவரது ஆட்சி நீண்ட காலம் நீடிக்கும். ஆக, அவருக்கும் ஹரிக்கும் இடையிலான உறவில் உள்ள விடயங்கள்தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் ஆண்ட்ரூ.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |